பாடசாலை அதிபர் ஜனாப் M.C.நிஸார்தீன் அவர்களின் வாழ்த்து


எமது கல்லூரியின் பழைய மாணவியர் சங்கம் (OGA)  தமக்கென இணையத்தளம் ஒன்றை ஆரம்பிக்கும் இந்த வரலாற்று நிகழ்வுக்கு வாழ்த்து செய்தி ஒன்றினை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் .

எமது கல்லூரியில் மட்டுமல்லாது சமூகத்தில் அரைவாசிப்பேர் மகளிர்களாக உள்ளனர். எனவே அவர்களும் தமது ஆற்றல், சாதனைகள், சேவைகள் என்பவற்றை ஏனையோர்க்கும் அறியச்செய்வதற்கு இதன் மூலம் வழி பிறக்கும்.

ஊடகங்களை வைத்திருப்பவர்களே இன்று பல்வேறு துறைகளிலும் முன்னேற்றமடைந்துள்ளனர். எனவே எமது சமூகத்தினரும் விசேடமாக பெண்கள் தமது ஆற்றல்களை வளர்த்துக் கொள்ளவும் எதிர்கால சந்ததியினருக்கு படிப்பினையாகவும் அமைய இந்த இணையத்தளம் உதவும் என திடமாக நம்புகிறேன். இது போன்ற முயற்சிகள் மென்மேலும் வளர இறைவன் துணைபுரிய பிரார்த்திக்கிறேன்.

 

அதிபர்

M. C. நிஸார்தீன்
(B. Ed. PGDEM, M. A. SLEAS )
Zahira College
Mawanella