OGA ஸ்தாபகர், முன்னாள் அதிபர் M.H.M நிஸார் அவர்களின் வாழ்த்து


மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத்தின் அறிய முயற்சிகளில் ஒன்றாகிய வெப்தள வெளியீட்டு நிகழ்வுக்கு வாழ்த்துச்செய்தியொன்றினை வழங்குவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

கல்லூரியின் அபிவிருத்திற்கு பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மட்டுமன்றி பழைய மாணவிகளும் தமது பங்களிப்பை வழங்குவதன் அவசியத்தை உணர்ந்து பழைய மாணவிகள் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. அவ்வகையில் கடந்த பல ஆண்டுகளாக பழைய மாணவிகள் சங்கம் கல்லூரியின் அபிவிருத்திற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றமை பாராட்ட்க்குரியது.

இக்கல்லூரியின் வரலாற்றையும், முக்கிய நிகழ்வுகளையும், சாதனைகளையும், தேவைப்பாடுகளையும் அறிந்து கொள்வதற்கும், அதற்கிணங்க தமது பங்களிப்புக்களை நிறைவேற்றுவதற்கும் நவீன தகவல் தொழில்நுட்ப சதனமாகிய இந்த வெப்தளம் பெரிதும் பயன்படும் என எதிர்பார்க்கிறேன்.

பழைய மாணவிகள் சங்கத்தின் நன் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

M.H.M நிஸார்

(BA-PGDE-SLPS I )
முன்னால் அதிபர்; வளவாளர் (NIE)
ஆசிரியப்பயிற்சிப் போதனாசிரியர்